இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்

0
13

கோவை; இந்திய கம்யூ., நூற்றாண்டு விழா, நல்லகண்ணு நூறாவது பிறந்தநாள் விழாவை, கட்சியினர் கொடி ஏற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கடந்த 1925, டிச., 25, 26ம் தேதி, கான்பூரில், கம்யூ., குழுக்களின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தி, இந்திய கம்யூ., தோற்றுவிக்கப்பட்டது. கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டும், கட்சியின் கிளை அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டது.

கோவை, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஜீவா இல்லத்தில், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் தலைமையில் நடந்த விழாவில், மாநில பொருளாளர் ஆறுமுகம் கொடியேற்றினார்.

மாவட்ட பொருளாளர் தங்கவேலு, துணை செயலாளர் குணசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கட்சி நூற்றாண்டு கடந்த பாதை குறித்தும், நல்லகண்ணு குறித்தும் நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ் பேசினார்.