‘இந்தியாவுக்கு, அரசுக்கு உறுதுணையாக நிற்போம்’

0
3

”மதத்தின் பெயரால் தாக்குதல் ஏற்படுத்தி, இந்தியாவை பல கூறுகளாக பிரித்து விடலாம் என்று நினைக்கும் கொடூரர்களை இனங்கண்டு அழிக்க, இந்தியாவால் முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது,” என்று, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\

இதுகுறித்து, அவரது அறிக்கை:

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவிகள் கொலை செய்யப்பட்டது, நமக்கு மாபெரும் மன வலியை தந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து, கொடூர கொலைகாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களுக்கும் எதிராக நிற்பது தான், எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

மதத்தின் பெயரால் தாக்குதல் ஏற்படுத்தி, இந்தியாவை பல கூறுகளாக பிரித்து விடலாம் என்று நினைக்கும் கொடூரர்களை இனங்கண்டு அழிக்க, இந்தியாவால் முடியும் என்ற நம்பிக்கை, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது.

இந்த கொடூர செயலை செய்த அயோக்கியர்களையும், இதற்கு ஆதரவு தந்தவனையும், விரைவாக துல்லியமாக தாக்கி அழிக்க, இந்தியா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, இந்தியாவின் பின்னாலும், அரசின் பின்னாலும் முழுமையாக நிற்போம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.