இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

0
1

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது பாகிஸ்தான். ஆனால், ஐ.எம்.எப்., வழங்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டி, அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.எம்.எப்.,க்கு, பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.