ஆவின் பாலகத்துக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்

0
83

ஆனைமலை முக்கோணம் பகுதியில் சேத்துமடை-பொள்ளாச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதியின்றி சாலையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பாலகத்துக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீசில், சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள ஆவின் பாலகத்தை தாங்களாகவே முன்வந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மேலும் அதற்கு உரிய தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.