ஆவின் அட்டைக்கு இனி ஆன்லைனில் கட்டணம்; ரொக்கத்தை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

0
93

கோவை; ஆவின் பால் அட்டை பெறும் நுகர்வோர் மற்றும் பால் முகவர்கள் ரொக்கப்பரிவர்த்தனையை தவிர்த்து ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

ஆவின்நிறுவனம் அனைத்து பால்அட்டை நுகர்வோரின் வசதிக்காகவும், பணத்துக்கானபாதுகாப்பு கருதியும், ரொக்க பணபரிவர்த்தனையை வரும் புத்தாண்டு முதல் ரத்து செய்து விட்டு ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் பால்அட்டை பெறும் வசதியை அறிமுகம் செய்கிறது.

இந்த வாய்ப்பினை அனைத்து ஆவின் நுகர்வோர்களும் பயன்படுத்தி, யு.பி.ஐ., டெபிட், கிரடிட், நெட்பேங்கிங் வாயிலாக பணம் செலுத்தி சலுகை விலையில் மாதாந்திர பால் அட்டையை ஜன.,1 முதல் ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பெற்று பயனடையலாம்.

பால் அட்டை ஆன்லைனில்பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படும். ஆர்.எஸ்.புரம் தவிர பிறவிற்பனை அலுவலகத்தில் பால் அட்டை வழங்கப்படமாட்டாது

ஆவின் பால் முகவர்கள் புத்தாண்டு முதல் அன்றாடபால் தேவைக்கான தொகையைஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி தேவைப்பட்டியலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில் மூன்று நாட்கள் தேவைக்கான தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி பால் வினியோகம் செய்யப்படும்.

முகவர் உரிமத்தினை டிச., 31க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.ரொக்கம் செலுத்துவதை பால் முகவர்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு ஆர்.எஸ்.புரம் அலுவலகத்தை நேரிலும், 9489043712 மொபைல் எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.