தென்மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒத்திகை நிகழ்ச்சி
தென்மேற்கு பருவமழை கடந்த 2 மாதங்களாக பெய்து வருகிறது. இதனால் மழை, வெள்ள சேதம் ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மழை காரணமாக அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவி னர் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணைக்கு நேற்று மாலை வந்தனர்.
அவர்கள், ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை பார்த்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், ஆழியாறு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேரிடர் மீட்பு குழுவினர் கூறியதாவது:-
20 பேர் கொண்ட குழு
தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு வினர் 20 பேர் கிணத்துக்கடவிற்கு வந்தனர். அவர்கள், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்புவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளத்தில் ஒருவர் சிக்கினால் பதற்றப்படாமல் முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.
விழிப்புணர்வு
வெள்ளத்தில் சிக்கியவர்களை காலி குடிநீர் பாட்டில்கள், கேன்க ளை பயன்படுத்தி மீட்பது, லைப் ஜாக்கெட், கயிறு கொண்டு மீட்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை யடுத்து மீட்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.