கோவை: காரமடை, டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் டாக்டர் ஆர்.வி., கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.போர்டு இயக்குனர்மற்றும்ஐ.ஜி.சி.சி., நிபுணர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 164 பேருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் துறையிலோ, வர்த்தகத் துறையிலோ சிறந்த தொழில் முனைவோராக சாதிக்க வேண்டும். படிப்பில் பின்தங்கி இருந்தாலும், உயர்ந்த சிந்தனைகள் மூலம் வாழ்வில் மேன்மை அடையலாம்,” என்றார்.
கல்லுாரியின் இணை நிர்வாக அறங்காவலர் சபிதா, அறங்காவலர்கள் கோபாலகிருஷ்ணன், பிரியங்கா மற்றும் கல்லுாரி முதல்வர் ரூபா, பேராசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.