திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த புதன் கிழமை (செப்.26) கோவை பேரூரில் நடைபெற்ற திமுகவின் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முதல் அமைச்சர், அமைச்சர்களை அவதுறாக பேசியதாக, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பேரூர் போலீசார், திமுக எம்.எல்.ஏ கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.