திருப்பூர் : சிவசேனா அமைப்பின் இளைஞர் அணியான யுவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பிரச்னை குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, கவர்னர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இப்பிரச்னையை திசை திருப்பும் விதமாக பேசும், தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதியிடம் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.நம் நாட்டின் கலாசாரம் பாதுகாக்கும் விதமாக, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.