ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.த.க., வினர் மீது வழக்கு

0
11

கோவை; நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.த.க.,வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.

சீமான் கைதை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக, அக்கட்சி நிர்வாகிகள் உட்பட, 50 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.