கோவை; கோவை – சத்தி ரோட்டில், ரூ.3.68 கோடியில், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவையில் ஏழு இடங்களில், பஸ் ஸ்டாண்ட்டுகள் செயல்படுகின்றன. இதில், உக்கடம் பஸ் ஸ்டாண்டை ரூ.20 கோடியிலும், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை ரூ.30 கோடியிலும் நவீன முறையில் புதுப்பிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை புதுப்பிக்க, உள்ளூர் திட்ட குழும நிதி ரூ.10 கோடி கேட்டு, நகர ஊரமைப்பு துறைக்கு, மாநகராட்சி கடிதம் எழுதியிருக்கிறது
இச்சூழலில், சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வளாகம், ரூ.3.68 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலில், ரூ.2.95 கோடியே ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டது.
நடைமேடை, கடைகள் பராமரிப்பு, கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன.
பஸ்கள் நிற்கும் பகுதியில் சமன் செய்து, தார் ரோடு போட வேண்டியிருக்கிறது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஆய்வு செய்தார்.
களிமண் பூமியாக இருப்பதாலும், அதிக பஸ்கள் வந்து செல்லும் என்பதாலும், தார் ரோடு தரமாக போட வேண்டும் என, பொறியியல் பிரிவினருக்கு, கமிஷனர் அறிவுறுத்தினார்.