ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்; சுகாதாரத்துறை கண்காணிப்பு

0
11

மேட்டுப்பாளையம்; கேரளாவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள பன்றிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல், வழுர் ஆகிய கிராமங்களில் உள்ள பண்ணைகளில் பன்றிகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் கேரளாவில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை கோவை மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பன்றி பண்ணைகள் உள்ளன. பல இடங்களில் நிரந்தரமாக பன்றிகள் பண்ணைகள் செயல்படாது. பன்றிகளுக்கு இதற்கான தடுப்பூசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னேரே போடப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் பன்றிகளுக்கு தற்போது தென்படவில்லை. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து பன்றிகளை கண்காணித்து வருகின்றனர். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கும், வழக்கமாக காணப்படும் ‘ஹச்1 என் 1’ பன்றிக் காய்ச்சலுக்கும் வேறுபாடுகள் உண்டு. இந்த வகையான காய்ச்சல் பன்றிகளை மட்டுமே தாக்கும்.

மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றனர்.—