ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

0
148

ஆழியாறு அணை பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அணை, காடம் பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது 118 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

உயிருக்கு ஆபத்து

நேற்று விடுமுறை என்பதால் ஆழியாறு பூங்கா, அணை பகுதியை பார்வையிட கோவை, திருப்பூர், பாலக்காடு உள்பட பல இடங்க ளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அதில் பலர், அணையின் மதகுகளில் இருந்து உபரிநீர் வெளியேற் றப்படும் பகுதிக்கு சென்றனர்.

அது தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். அங்கு சுற்றுலா பயணிகள் தடையை மீறி சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அந்த பகுதியில் கொஞ்சம் கவனம் சிதறி தவறி விழுந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

போலீசார் எச்சரிக்கை

அதை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இதற்கிடையே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆழியாறு போலீசார் அவ்வப் போது சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்புகின்றனர்.

அணை மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.