கோவை:கோவையைச் சேர்ந்த இருவரிடம், ஆன்லைன் வாயிலாக, 28 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து கோவை ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரிக்கின்றனர்
கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்த 47 வயது நபர், சுய தொழில் செய்து வருகிறார். இவர், பிப்ரவரியில், ‘பேஸ்புக்’ பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த விளம்பரத்தில், ‘சிட்டி குரூப் ஜோதி குரோத் ஸ்கீம்’ என்ற திட்டத்தில் பணம் முதலீடு செய்தால், தினசரி முதலீடு செய்த பணத்திற்கு 10 சதவீத லாபம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர், அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு ஏழு தவணைகளில், 13.38 லட்சம் ரூபாய் அனுப்பினா
அதன்பின், அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. கவியரசன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை கணபதியைச் சேர்ந்த 76 வயது மூதாட்டியை டெலிகிராம் செயலி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள், மூதாட்டியின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி, வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினர்.
மூதாட்டியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை, தாங்கள் கொடுக்கும் கணக்குக்கு அனுப்பச் சொல்லி மிரட்டினர். மூதாட்டி வங்கி கணக்கில் இருந்த, 15.38 லட்சத்தை அனுப்பினார். அதன்பின் பணம் திரும்பி வரவில்லை. அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்