ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் பைக் டாக்சியை ரத்து செய்ய கோரி

0
81

கோவை; கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆட்டோ தொழிலாளர்கள் கூறுகையில், ‘அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதியளித்ததுமன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பைக் டாக்ஸி இல்லை. எனவே, பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இல்லை எனில், எங்களது அடுத்தகட்ட போராட்டம், மிகப்பெரிய அளவில் நடக்கும். 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும்’ என்றனர்.

கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு., பொதுச்செயலாளர் சிவாஜி உட்பட, 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.