ஆசிரியர்களின் சுமை குறைப்பதாக கண் துடைப்பு அறிவிப்பு! ‘ எமிஸ்’ பணிகளிலிருந்து முழுமையாக3R HY HYY 4E விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

0
5

கோவை:இனி, ‘எமிஸ்’ இணையத்தில் அத்தியாவசிய விபரங்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என, அரசு நேற்று அறிவித்துள்ள நிலையில், இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என விமர்சித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், இப்பணியில் இருந்து தங்களை முழுமையாக விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது:

பணிச்சுமையை குறைப்பதாக, ஏற்கனவே இது போல் பல அறிவிப்புகள் வந்துவிட்டன; ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. 100 வகையான போட்டிகள், விபரங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. தனி ஆட்களை நியமித்தாலும், அவர்களுக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை நாங்கள்தான் தரவேண்டியுள்ளது.

தனியாக நியமிக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் மட்டும்தான் செய்கின்றனர். தேர்தல் சமயத்தில், வாக்குச்சாவடி பணி உள்ளிட்ட பணிகளிலும், எங்களை ஈடுபடுத்தக்கூடாது.

ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க மட்டுமே. அந்த வேலை, இந்த வேலை என இடையூறு செய்தால், கற்பித்தல் பணியை நுாறு சதவீதம் மேற்கொள்ள முடியாது.

மாணவ, மாணவியர்தான் பாதிக்கப்படுவர். ஆகவே, சுதந்திரமாக பாடம் நடத்தும் வகையில், கூடுதல் பணிகளில் இருந்து, அரசு எங்களை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.