அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்

0
23

கோவை : கோவை வடக்கு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணா பல்கலை மாணவி, பல்கலை வளாகத்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கு படிப்பு, பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்து வரும் தி.மு.க., அரசைக் கண்டித்தும் நாளை, செஞ்சிலுவைச் சங்கம் முன், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.