சென்னை
மீடூ இயக்கம் என்ற பெயரில் நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
மீடூ விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில்
பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.என வைரமுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, பொய்யர் என கூறி உள்ளார்.
LIAR! https://t.co/osvaGLb4mQ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018