அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம்

0
86

வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம்

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் ஜீவசமாதி உள்ளது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அழுக்கு சாமியார் ஜீவசமாதி கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார். அவருக்கு ேகாவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.