அருளானந்தர் ஆலயத்தில் தேர்த் திருவிழா கொடி யேற்றம்

0
4

கோவை : கோவை – தடாகம் சாலையிலுள்ள, புனித அருளானந்தர் ஆலய யுபிலி ஆண்டு தேர்த்திருவிழாவையொட்டி, கொடியேற்றும் நிகழ்வு, விமரிசையாக நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு, மறை மாவட்ட பொருளாளர் அந்தோணி செல்வராஜ் தலைமை வகித்தார். புனித அருளானந்தர் ஆலய பங்குதந்தை ததேயுஸ்பால்ராஜ், உதவி பங்குத்தந்தை கரோலின்சிபு ஆகியோர், முன்னிலை வகித்தனர். பாரம்பரிய இசை முழக்கங்களுடன், அருளானந்தர் ஆலய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, காலை 6:30 மணிக்கு திருப்பலி, 8:00 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது.

திரளான பங்கு மக்கள், பக்த சபையினர் அருட் சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.