அரசு மருத்துவமனை சிகிச்சை ஜோர் : இருதய துளையுடன் வந்த மாணவிய ர் பூரண நலம்!

0
20

கோவை: மூன்று பள்ளி மாணவியருக்கு, இருதயத்தில் ஏற்பட்ட துளையை நவீன அறுவை சிகிச்சை வாயிலாக சரிசெய்த அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகளால், ஏழைநோயாளிகள் பலர் பயனடைந்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன், வெவ்வேறுகாலகட்டங்களில் நெஞ்சு வலியுடன் வந்த கோவை, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, மூன்று பள்ளி மாணவியரை பரிசோதித்தபோது, அவர்களின் இருதயத்தில் துளை இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின், மூன்று மாணவியரும் இப்போது நலமுடன் உள்ளனர்.

மூன்று மாணவியரும் சிகிச்சைக்குப் பின், உடல்நலம் தேறியுள்ளனர். இதற்கு முன், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள, சென்னை செல்ல வேண்டியிருந்தது. தற்போது கோவை அரசு மருத்துவமனையிலேயே, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.