அரசு மருத்துவமனையில் 25 பேருக்கு கிட்னி மாற்று சிகிச்சை

0
6

கோவை: ஓராண்டில், 25 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 150 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, தொடர் டயாலிசிஸ் வழங்கப்படுகிறது. மாதத்துக்கு, 1,800 க்கு மேல் புறநோயாளிகளாகவும், 250 க்கு மேல் உள்நோயாளிகளாகவும் சிறுநீரகவியல் துறையில் சிகிச்சை பெறுகின்றனர். மாதம், 110 நோயாளிகளுக்கு மேல் வயிறு டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில், 25 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகத்தை காப்பாற்ற, தினமும் எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும், உப்பு மிகுந்த உணவுதவிர்க்க வேண்டும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் மற்றும் புகை பிடிக்கும் தவிர்க்க வேண்டும்.