கோவை; கோவை – தடாகம் சாலை, வெங்கிட்டாபுரத்தில் நேற்று காலை, சாலை பராமரிப்புப்பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த, எஸ்.11 என்ற அரசு பஸ் வேகமாக எதிர்ப்புறமாக ஒருவழிப்பாதையில் சென்றது.
இதை சற்றும் எதிர்பார்க்காத வாகனஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் திக்குமுக்காடினர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.