அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்- 4 பேர் காயம்

0
158

வால்பாறையிலிருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் பழைய வால்பாறை பஸ் நிறுத்தம் பகுதியில் வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட்டை நோக்கிச் சென்ற அரசு பஸ்சும், வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறையை நோக்கி வந்த அரசு பஸ்சும் வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 2 அரசு பஸ்களின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மேலும் பஸ்களில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் வால்பாறை- சோலையாறு அணை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.