பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்கிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் பருவ தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் பருவத்தின் பாட புத்தகங்கள், நோட்டுகளை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் தினகரன் மற்றும் உதவி ஆசிரியை சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவர்களிடம் தன் சுத்தம் பேணுதல், மழை காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது, சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக செல்வது குறித்து மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.