கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.பி.கந்தசாமி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களாக சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூர் காமாட்சிபுரம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சி, பட்டணம், பீடம்பள்ளி, கலங்கல், காங்கயம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அப்போது அவருக்கு பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர என்னை நீங்கள் வெற்றி பெற செய்துள்ளீர்கள். இதன் மூலம் சூலூர் சட்டமன்ற தொகுதி என்றும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துணையுடன் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்க செய்வேன். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு கா.அசோகன், ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, முன்னாள் தொகுதி செயலாளர் லிங்குசாமி, இருகூர் நகர செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் துணைத்தலைவர் பரமசிவம், பிரகாஷ், பள்ளபாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் வி.கே. சண்முகம், கண்ணம்பாளையம் அங்கமுத்து, பீடம்பள்ளி முன்னாள் தலைவர் குமாரவேல், பட்டணம் சாரதாமணி ஜெயராஜ், காங்கயம்பாளையம் கே.எஸ்.ரங்கசாமி உள்பட பலர் இருந்தனர்.