அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

0
156

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக் டர்களுக்கான பணி நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் ரவி சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருந்தது. அதை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றப்பட்டு உள்ளது.

இந்திய அளவில் வாரத்திற்கு 42 மணி நேரம் மட்டுமே டாக்டர்களின் பணி நேரமாக உள்ளது. பணி நேர நீட்டிப்பால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரம் 48 நேரமாகி உள்ளது.

இதனால் பணிச்சுமை அதிக ரித்து உள்ளது.

எனவே பணிநேரத்தை அதிகரித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.