கோவை: அரசு வழங்கியுள்ள, காப்பீடு திட்ட அட்டையை ஏற்காத மருத்துவமனைகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, மத்திய அரசு வழங்கிய விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை ஏற்று, தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகள், அந்த காப்பீடு திட்டத்தை ஏற்பதில்லை. இந்த மருத்துவமனைகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்