கோவை; கோவை அரசு கலைக்கலுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2024 – 25ம் கல்வியாண்டின் ஒற்றைப் பருவ (நவ., 2024) தேர்வு முடிவுகள் கல்லுாரி இணைய தளத்தில் (www.gacbe.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண்ணை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
நவ., 2024ம் ஆண்டு ஒற்றைப்பருவ தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில் உள்ள யூகோ வங்கியில் கணக்கு எண்:19730100 001612 ல் உரிய கட்டணத்தை செலுத்தி, மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பத்தினை, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில், 24ம் தேதி மாலை, 3:00 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பத்தினை, கல்லுாரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கான கட்டண விபரங்களும், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விபரமும், விண்ணப்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.