அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு

0
6

கோவை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட, அரசு உதவி வழக்கறிஞர் பதவிக்கான தேர்வை, 240 பேர் எழுதினர்.

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் முதல்நிலைத் தேர்வு, தகுதி தேர்வாகும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்படும்.

முதன்மை தேர்வு, கோவையில் இரு மையங்களில் நடந்தது. 240 பேர் பங்கேற்றனர்; 112 பேர் ‘ஆப்சென்ட்’ ஆகினர்.