அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி : மாவட்ட வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார் முதல்வர்

0
71

பொள்ளாச்சி; ”கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, பல திட்டங்களை செயல்படுத்துகிறார்,” என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் அரசுப்பள்ளி கட்டடம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் முடிவுற்ற அரசுப்பள்ளி கட்டடம், மருத்துவமனை கட்டடம் என பல்வேறு கட்டடங்களை, முதல்வர் உத்தரவின்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், கிராம சாலைகளை சீரமைக்க, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் தயாராக உள்ளார்.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதல்வர் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்.

மின்சாரத்துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க, தமிழகம் முழுவதும் ஒரு மொபைல்போன் எண் அறிவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தினமும், நான்காயிரம் அழைப்புகள் வரை வருகின்றன. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு தெரிவித்து உடனடியாக தீர்வு காணப்படுகிறது. புதிய மின் இணைப்பு, மாற்றம் கேட்டு விண்ணப்பித்தால் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.