அடுத்தகட்ட அரசியல் நகர்வு.. அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தாரா ரஜினி?

0
121

 

டெல்லி: டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்றுதான் கூறவேண்டும். தான் கட்சி தொடங்க போவதாக அறிவித்ததோடு அவரது அரசியல் பயணம் முன்னேறாமல் இருக்கிறது.

இந்த நிலையில் அவர் பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கனவே பல முறை கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறார் என்றும் கூட கூறப்பட்டது. தற்போது ரஜினியின் டெல்லி பயணத்தால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார்
அமித் ஷாவை சந்தித்தார்?

நடிகர் ரஜினி காந்த் நேற்று அதிகாலை டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தாக கூறப்படுகிறது. அமித் ஷாவுடன் அவரும் சில பாஜக நிர்வாகிகளும் ரகசியமாக சந்தித்து பேசினார்கள் என்று கூறப்படுகிறது.