அசத்திய, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் : தினமலர் – பட்டம்’ மெகா வினாடி- வினா போட்டி

0
13

கோவை : ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் சார்பில் நடந்த, ‘பதில் சொல்; பரிசை வெல்’ என்ற வினாடி-வினா போட்டியில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அசத்தினர்.

‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பு ‘பட்டம்’ இதழ் சார்பில் கோவை மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் ‘வினாடி-வினா விருது, 2024-25’ போட்டி நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமமும் இணைந்து இப்போட்டியை வழங்குகின்றன. இதில், பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில், பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

* பெரியகடை வீதி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 35 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் நிறைவில், ‘ஏ’ அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சரவணகுமார், சுரேன் கார்த்திகேயன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, தலைமையாசிரியர் மரகதம் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் வாணிஸ்ரீ, குணசுந்தரி, எஸ்தர் லீமா ஆகியோர் உடனிருந்தனர்.

* நொய்யல் பாலம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 37 பேர் பொது அறிவுத்தேர்வு எழுதினர்.

இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில், ‘இ’ அணியை எட்டாம் வகுப்பு மாணவியர் அல்ஷிபா, ஹசிலா பாத்திமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, தலைமையாசிரியர் இந்திரா பாபு சாந்தினி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் ராஜகுமாரி, அனிதா, சிபியா, சனோபியா பர்வீன் ஆகியோர் உடனிருந்தனர்.

* ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், வினாடி- வினா போட்டிக்கான தகுதிச்சுற்று தேர்வை, 306 பேர் எழுதினர். மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், ‘எப்’ அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியர் பிரியவதனி, கிருபாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் பழனியம்மாள் பரிசுகள் வழங்கினார். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, நளினா, ஈஸ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.