அங்கன்வாடியில் முன்பருவக்கல்வி கற்ற குழந்தைகளுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
அன்னுார் வட்டாரத்தில், பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவுடன் கற்பிக்கப்படுகிறது.
இதில் ஐந்து வயது நிறைவடைந்து, துவக்கப்பள்ளிக்கு கல்வி கற்க செல்லும் குழந்தைகளுக்கு முன் பருவக்கல்வி சான்றிதழ் வழங்கும் விழா அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளியில் நடந்தது.
இதில் 60 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் முன் பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் உடன், சிலேட் , பென்சில், ரூல் பென்சில், ரப்பர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபா, மேற்பார்வையாளர் திலகவதி, ஒருங்கிணைப்பாளர் பிரவினா, பள்ளி தலைமை ஆசிரியை ஜீவலதா உள்பட பலர் பங்கேற்றனர்.